Sunday 5 February 2012

இன்று ஓர் தகவல்- மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் யார்?[பகுதி-1]

 ’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும்’மலகைன்’இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன. 1.வானவர்கள் என்றால் யார் ? ‘

மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)
இவர்கள் ஆண்களுமல்ல! பெண்களுமல்ல! இவர்களுக்கு ஊண், உறக்கம் எதுவும் கிடையாது. இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள். لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாவர்

No comments:

Post a Comment