Sunday 5 February 2012

மனத் தூய்மை மிக முக்கியம்.

உடல் நலம் மிகவும் முக்கியம். அதைவிட முக்கியம் மனநலம். நம்முடைய மனதானது ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருந்தால் தான் நம்மால் நமது உடலை நல்லபடியாக பாதுகாக்க முடியும். மனம் எக்காரணத்திலாவது சோர்ந்து போய் பாதிக்கப்பட்டால் நமது உடல் நலம் வெகுவாக பாதிப்படையும்.

ஒருநாள் சிறுவன் ஒருவன் தனது வீட்டில் உட்கார விரும்பினான். அவன் உட்கார விரும்பிய இடத்தில் தூசுகள் படிந்திருந்தன. உடனே அதை சுத்தம்செய்து விட்டு அந்த இடத்தில் உட்கார்ந் தான். இதை கவனித்துக் கொண்டிருந்த அவனது தாயார் மகனிடம் விசாரித்தார்.

“சற்று முன்னர் நீ என்ன காரியம் செய்தாய்”

“அம்மா தரை தூசியாக இருந்தது. அதனால் அந்தத் தூசியை தட்டிவிட்டு உட்கார்ந்தேன்.”

இப்போது அந்த அம்மையார் தனது மகனிடத்தில் சொன்னார்.

“இறைவனும் அப்படிதானப்பா. நம்முடைய மனசுக்குள் அழுக்கு இருந்தால் அவர் அங்கே வந்து உட்காரமாட்டார். நாம் நம்முடைய மனத்தினுள் நிறைந்திருக்கும் பொறாமை மற்றும் தீய எண்ணங்களை துடைத்து சுத்தம் செய்து மனத்தை மிகத்தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இறைவன் அங்கே வந்து உட்காருவார்”

தாயார் சொன்ன இந்த அறிவுரை அந்தச் சிறுவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அறிவுரையைப் பின்பற்றி வாழ ஆரம்பித்தான் அந்தச் சிறுவன். அச்சிறுவனே பிற்காலத்தில் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்த திருமுருக கிருபானந்த வாரியார்

இது போன்று நாமும் நம்மவர்களுக்கு இஸ்லாமிய ஆன்மிகத்தை எடுத்து சொல்லலாமே?

No comments:

Post a Comment