Tuesday 24 January 2012


DAY -4: [19.01.2012]****இன்று ஓர் தகவல்****
அஸ்ஸலாமு அலைக்கும்...
ஆயத்துல் குர்ஸிய்யியை குர் ஆனின் வசனங்களில் தலைமையான ஆயத்[ஸைய்யிதுல் ஆயாத்]என்று ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா?அல்லாஹ்வுடைய தன்மைகள் இந்த வசனத்தில் மட்டுமே அதிகமாக வந்துள்ளன அவை:

அல்லாஹ்-
[1]அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை;
[2]அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்;[3]என்றென்றும் நிலைத்திருப்பவன்;
[4]அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; [5]வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன;
[6]அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?
[7](படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;
[8]அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது;
[9]அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது;
[10] அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - [11]அவன் மிக உயர்ந்தவன்;[12]மகிமை மிக்கவன்.(al qur'aan 2:255)
 

DAY 3-[18.01.2012].இன்று ஓர் தகவல்

அல்லாஹ்வுக்குரிய அழகிய திருநாமங்கள் 99 ம் சிறப்பு பெயர்கள்தான் அவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பெயர் அல்லாஹ் என்ற பெயராகும்,

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்.குர்ஆன் (Surat Al-A’raf 7:180)

அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஹதீஸ், புஹாரி : 6410 அபூஹூரைரா (ரலி.

(DAY-2) இன்று ஓர் தகவல்:

أركان الإيمان
ஈமானின் அடிப்படைகள்-6 அவை:

1. அல்லாஹ்வை நம்புதல்

2. அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புதல்

3. அவனுடைய வேதங்களை நம்புதல்

4. அவனுடைய தூதர்களை நம்புதல்

5. மறுமையை நம்புதல்

6. விதியின்படியே நன்மை, தீமை யனைத்தும்
.

1.இன்று ஒரு தகவல்: இஸ்லாத்தின் கடமைகள் (5)
'[1]வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல்,[2] தொழுகையை நிலை நிறுத்துதல்,[3] ஸகாத்து வழங்குதல்,[4] ரமாலானில் நோன்பு நோற்றல்,[5]ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். 
 ·  ·  · 16 January at 15:55