Sunday 11 March 2012

இன்று ஒரு தகவல்.
==================
குர்ஆனில் "யா அய்யுஹல்லதீன ஆமனூ"89.என்று -தடவையும்,
         ,,             "யா அய்யுஹன்னாஸ்" என்று"20 -தடவையும்
         ,,             "யா அய்யுஹர்ரசூலு"என்று"2 -தடவையும்,
         ,,             "யா அய்யுஹன்னன்பிய்யு"13-என்று -தடவையும்,
         ,,             "யா அய்யுஹல் இன்சானு"2-என்று-தடவையும் வருகின்றன.    

Sunday 5 February 2012

இன்று ஓர் தகவல்- மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் யார்?[பகுதி-1]

 ’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும்’மலகைன்’இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன. 1.வானவர்கள் என்றால் யார் ? ‘

மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)
இவர்கள் ஆண்களுமல்ல! பெண்களுமல்ல! இவர்களுக்கு ஊண், உறக்கம் எதுவும் கிடையாது. இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள். لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாவர்

இன்று ஓர் தகவல்- மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் யார்?[பகுதி-2]


*வானவர்களின்-எண்ணிக்கை
وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُو

அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். ‘மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 74:30)

*வானவர்களின் உணவு, பானம்
நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் கண்ணியமிக்க விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு காளைக் கன்றை பொரித்து வைத்ததும் உண்ணாததைக் கண்ட நபியவர்கள் பயந்துவிட்டார்கள். பயப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு நற்செய்தி கூறிவிட்டுச் செல்ல வந்த வானவர்கள்’ என்ற செய்தி 51:26,27 வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து மனதர்களின் உணவை உண்ணவோ,அருந்தவோ மாட்டார்கள் எனத் தெரியவருகிறது

*முற்;றிலும் அவனுக்கு வழிப்படுவர்.
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (21:26,27) தமது இறைவனை போற்றிப்புகழ்ந்த வண்ணமிருப்பார்கள் (39:75)

* இறையில்லம், இறைமறை ஓதுமிடங்களில் வானவர்கள்.
உங்களில் உருவர் தொழுகையில் ஆமீன் கூறும்போது வானவர்களும்; ஆமீன் கூறுகின்றனர். எவரது ஆமீன் வானவர்களின் ஆமீனுக்கேற்ப உள்ளதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.(அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னு மாஜா-851).

நாயகத் தோழர் உஸைத் இப்னு குளைர் குர்ஆன் ஓதும் போது ஒளிஉருவில் வானவர்கள் வந்து கேட்டுக் கொண்டிருந்தனர். (புகாரி 5018-ஹதீஸின் சுருக்கம்)

*நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவர்.
(வானவர்கள்) நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள் (42:5)
18. தீயவர்களை சபிப்பர் (லஃனத்துல்லாஹி வல்மலாயிக்கத்தி)

வானவர்கள் இறைவனுக்கு மாறுசெய்பவர்களுக்கு எதிராக சாபமிடுவார்கள்.

‘ ஏக இறைவனை மறுத்து,அதே நிலையில் இறந்தோர் மீது இறைவனின் சாபமும், வானவர்கள் நல்லோர்கள் அனைவரின் சாபமும் உள்ளது (2:161)

* உருவமுள்ள வீட்டில் நுழையார்.
நாயும்,உருவப்படமும் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள். (புகாரி-3225,முஸ்லிம்-2112,திர்மிதி-2804, நஸய5347, இப்னுமாஜா3649,

*வானவர்களின் தோற்றம்
மனிதர்கள் ஒருபோதும் வானவர்களாக முடியாது. ஆனால் வானவர்கள் விரும்பிய தோற்றத்தில் வரமுடியும்.நாய் பன்றியின் உருவத்தை தவிர.

இன்று ஓர் தகவல்-மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் யார்?[பகுதி-3]


வானவர்களின் பணிகள்
தூதுவச்செய்தியை அறிவிப்பது,மழைபொழிவிப்பது,காற்றை வீசச்செய்வது, கண்காணிப்பது, காப்பாற்றுவது,நன்மை தீமைகளை பதிவு செய்வது,உயிரைக்கைப்பற்றுவது,மண்ணறையில் விசாரணை செய்வது,நல்லவர்களுக்குப் பரிந்துரைப்பது,ஸூர்ஊதுவது, சுவர்க்கம் நரகத்தை காவல் புரிவது, அர்iஷ சுமப்பது போன்ற சில பொறுப்புகள் இறைவனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அத்தனையும் அல்லாஹ்வால் தான் செய்யப்படுகின்றன.ஆயினும் நிர்வாக சீரமைப்புக்காhவும், உலகின் ஒழுங்கு முறைக்காகவும்,கட்டுப்பாடான இயக்கத்திற் காகவும், மனிதன் பாடம் பெறுவதற்காகவும் வானவர்களிடம் இவ்வாறு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

யார் யாரிடம் என்னென்ன பொறுப்புகள் ?

1*வஹி -இறை தூதின்- பொறுப்பு.-வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) அர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறைதூதர்களுக்கு (நுபுவ்வத் என்னும்) தூதுவச் செய்திகளை கொண்டு வருவதே இவர்களின் பணியாகும்.

2* மழை, காற்றின் பொறுப்பு.- இதன் பொறுப்பாளர் வானவர் மீக்காயீல். இவர் மழை, காற்று,மரம் செடி கொடிகள் முதலானவற்றுக்குப்; பொறுப்பாளர் ஆவார்.

3* சூர் ஊதுவதின் பொறுப்பு.- இதன் பொறுப்பாளர் இஸ்ராஃபீல் (அலை). 

4*உயிரைக் கைப்பற்றும் வானவர். (மலக்குல் மவ்த்) உயிரைக்கைப்பற்றும் வானவருக்கு மலக்குல் மவ்த் எனக் குர்ஆன் கூறுகிறது. இவர்கள் பெயர் இஸ்ராயீல் என்று சொல்லப் படுகிறது.

7,8*மனிதனின் நன்மை தீமைகளை பதிவு செய்யும் வானவர- வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ‘ரகீபுன் அத்தீத்’இது அவர்களின் பெயர்களல்ல. அவர்களின் பண்புப் பெயர்களாகும். ‘கிராமன் காத்திபீன்’ கண்ணியத்திற்குரிய எழுத்தாளர்கள் என்று அல்லாஹ்வே சிறப்பிக்கிறான்.(82;:12)

5,6* கப்ரில் (மண்ணறையில்) வருகை தரும் வானவர்கள்.-
இவர்களின் பெயர்கள் முன்கர்,நக்கீர்.

9*சுவர்க்கத்தின் காவலர்கள் (خزنة الجنة ) -அதன் தலைவர் ரிழ்வான் ஆவார்கள்,

10* நரகின் காவலர்கள் (خزنة جهنم)-அதன் தலைவர் மாலிக் ஆவார்

இது அல்லாது கணக்கற்ற மலக்குகள் உள்ளனர் அவர்களது எண்ணிக்கையை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
 

இன்று ஓர் தகவல்


வேதங்கள்-4
திருக்குர்ஆனில் நான்கு வேதங் களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு:

1.ஸபூர்: தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)

2,தவ்ராத்: மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (நூல்: புகாரீ 4116, 4367)

3.இஞ்சில்: ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)

4.திருக்குர்ஆன்: முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)
இது அல்லாமல் பல நபிமார்களுக்கு பல ஏடுகளும் அனுப்பப்பட்டுள்ளன.
 — with Saheed Taher and 45 others.

குர்ஆனின் பாதுகாப்பு


நான்கு வேதங்களும் அல்லாஹ்விடமிருந்துதான் வந்தது என்றாலும் குர்ஆனைத் தவிர மற்ற மூன்றும் மறைந்து அல்லது மாற்றப்பட்டு இருப்பதன் காரணம் அவற்றை தாம் கடைசி வரை பாது காப்பதாக அல்லாஹ் எங்கும் வாக்கு கொடுக்கவில்லை ஆனால் குர்ஆனுக்கு இந்த வாக்குறுதியை அல்லாஹ் கூறியுள்ளான் எனவே எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் பரிசுத்த குர்ஆனை எந்த கொம்பனாலும் மாற்றவோ அழிக்கவோ முடியாது என்பதை உறுதியாக சொல்ல முடியும் இந்த பாதுகாப்பு வாக்குறுதியை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான் என்பதை பாருங்கள்:

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.15:9.

உலகம் அழியும் காலம் நெருங்கும்போது அல்லாஹ் குர்ஆனின் எழுத்துக்களை உயர்த்தி விடுவான் அதை திறந்தால் எழுத்து இன்றி வெறும் காகிதன்களே தெரியும்.
 

இன்று ஓர் தகவல்

*குர்ஆனிலேயே பெரிய சூரா[அத்தியாயம்]எது?
*குர் ஆனிலேயே பெரிய ஆயத்[வசனம்]எது?

குர்ஆனில் பெரிய சூரா, 2 வது சூராவாகிய 'அல் பகரா'ஆகும்,
குர்ஆனில் பெரிய ஆயத் சூரா பகராவில் உள்ள 282வது வசனமாகும், 



*குர்ஆனில் மொத்த வார்த்தைகள் மற்றும் எழுத்துக்கள் எத்தனை?

குர்ஆனின் வார்த்தைகள் மொத்தம்: 77439 ஆகும். (சிலர் 77437 என்றும் வேறுசிலர் 77277 என்றும் கூறுகின்றனர்).

குர்ஆனின் எழுத்துக்கள் மொத்தம்: 323015 ஆகும். (சிலர் 321000 என்றும் வேறுசிலர் 340740 என்றும் கூறுகின்றனர்).




. குர் ஆனில் மொத்தம் எத்தனை சூராக்கள்[chapter], ஜுஸ்வுகள்[volume],ஆயத்கள்[வசனங்கள்]உள்ளன?

குர் ஆனில் மொத்தம்
சூராக்கள்[chapter]-114 ,
*ஜுஸ்வுகள்[volume]-30
*ஆயத்கள்[வசனங்கள்]-6666.