Sunday 5 February 2012

இன்று ஓர் தகவல்- மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் யார்?[பகுதி-2]


*வானவர்களின்-எண்ணிக்கை
وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُو

அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். ‘மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 74:30)

*வானவர்களின் உணவு, பானம்
நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் கண்ணியமிக்க விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு காளைக் கன்றை பொரித்து வைத்ததும் உண்ணாததைக் கண்ட நபியவர்கள் பயந்துவிட்டார்கள். பயப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு நற்செய்தி கூறிவிட்டுச் செல்ல வந்த வானவர்கள்’ என்ற செய்தி 51:26,27 வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து மனதர்களின் உணவை உண்ணவோ,அருந்தவோ மாட்டார்கள் எனத் தெரியவருகிறது

*முற்;றிலும் அவனுக்கு வழிப்படுவர்.
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (21:26,27) தமது இறைவனை போற்றிப்புகழ்ந்த வண்ணமிருப்பார்கள் (39:75)

* இறையில்லம், இறைமறை ஓதுமிடங்களில் வானவர்கள்.
உங்களில் உருவர் தொழுகையில் ஆமீன் கூறும்போது வானவர்களும்; ஆமீன் கூறுகின்றனர். எவரது ஆமீன் வானவர்களின் ஆமீனுக்கேற்ப உள்ளதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.(அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னு மாஜா-851).

நாயகத் தோழர் உஸைத் இப்னு குளைர் குர்ஆன் ஓதும் போது ஒளிஉருவில் வானவர்கள் வந்து கேட்டுக் கொண்டிருந்தனர். (புகாரி 5018-ஹதீஸின் சுருக்கம்)

*நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவர்.
(வானவர்கள்) நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள் (42:5)
18. தீயவர்களை சபிப்பர் (லஃனத்துல்லாஹி வல்மலாயிக்கத்தி)

வானவர்கள் இறைவனுக்கு மாறுசெய்பவர்களுக்கு எதிராக சாபமிடுவார்கள்.

‘ ஏக இறைவனை மறுத்து,அதே நிலையில் இறந்தோர் மீது இறைவனின் சாபமும், வானவர்கள் நல்லோர்கள் அனைவரின் சாபமும் உள்ளது (2:161)

* உருவமுள்ள வீட்டில் நுழையார்.
நாயும்,உருவப்படமும் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள். (புகாரி-3225,முஸ்லிம்-2112,திர்மிதி-2804, நஸய5347, இப்னுமாஜா3649,

*வானவர்களின் தோற்றம்
மனிதர்கள் ஒருபோதும் வானவர்களாக முடியாது. ஆனால் வானவர்கள் விரும்பிய தோற்றத்தில் வரமுடியும்.நாய் பன்றியின் உருவத்தை தவிர.

No comments:

Post a Comment